Saturday, December 6, 2014

கந்தரோடைநேர்காணல்



            



                                                 S.krishnarajah

                           (lec.of history department)


1. கந்தரோடையின் வரலாற்றுப் பின்னணி பற்றிய உங்களது கருத்து?

இது வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட காலத்துக்குரியது.
  2011ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பெருங்கற்கால மண்படைக்கு அப்பால் மேலும் பல மண்படைகள் அடையாளம் காணப்பட்டது. அகழ்வாய்வுக் கிடங்கின் 30ம் 31ம் மண்படைகள் பெருங்கற்காலத்திற்கு முற்பட்டவை. எனவே  இது குறுணிக்கற்காலப் பண்பாட்டில் இருந்து வளர்ச்சி பெற்று பெருங்கற்காலத்தில் பௌத்தத்துடன் இணைந்து நிலையான வணிக சமய பண்பாட்டுடன் முக்கியம் பெற்று நகரமயமாக்கப்பட்டது.


2. இப்பிரதேசம் எந்த பாரம்பரியத்தை பிரதிபலிக்கின்றது?

இது தனியான ஒரு குறிப்பிட்ட இன ஒரு குறிப்பிட்ட மத பண்பாட்டுக்குரியது என கூறமுடியாது. ஏனெனில் இங்கு இடம் பெற்ற அகழ்வாய்வின் படி வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திற்கும் கி.பி12ம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட கால எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
  
3. 2011ம் ஆண்டு நடைபெற்ற ஆய்வின் ஆய்வறிக்கை வெளியிடப்படாமைக்கான காரணம்?

தொல்லியல் திணைக்களம் எதிர்பார்த்த முடிவுகள் அவ் ஆய்வில் பெறப்படவில்லை. ஆகையால் ஆய்வறிக்கை வெளியிடுவது தொடர்பான  ஆர்வம் இல்லை.

4.கந்தரோடையும் ஏனைய மரபுரிமைசின்னங்கள் போல முக்கியத்துவம் பெறுமா?

கந்தரோடையை தற்போது பராமரிப்பவர்கள் இராணுவத்தினர். இனிவரும் காலத்தில் பல்கலைக்கழகம் போன்ற படித்தவர்களிடம் அப்பொறுப்பை வழங்குவார்கள் எனில் இக் கந்தரோடை பாதுகாக்கப்படும்

5.இவ் மரபுரிமைச் சின்னத்தைப் பாதுகாப்பதனால் இனிவரும் காலத்தில் தொல்லியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமா?

மாகாண அரசாங்கத்திற்கு தொல்லியல் சம்பந்தமான உரிமம் கொடுக்கப்படும் பட்சத்தில் நிச்சயமாக யாழ்பல்கலைக்கழக தொல்லியல் பட்டதாரிகளுக்கு வேலை வழங்கப்படும்




M.Sritharan (supervisor in kantharodai)




கந்தரோடையின் வரலாற்றுப் பின்னணி பற்றிய உங்கள் கருத்து?
இவருடைய கருத்துப்படி கந்தரோடை ஆனது இந்தியாவில் இருந்து இலங்கை வந்த சங்கமித்தை குழுவினர் யாழ்ப்பாணத்தின் மாதகல் பகுதிக்கு வந்தனர் என்றும் அக்குழுவினரின் சமாதிதான் கந்தரோடை ஸ்தூபி என்று கூறினார்.

இங்கு பளிங்கு நாணயங்கள்இபுத்தர்;சிலைஇகல்வெட்டுக்கள் மணிகள் இமட்பாண்டங்கள் என்பன கிடைத்துள்ளன.

தற்போது தனியாருக்கு மையத்திற்குள் பிரவேசிக்க அனுமதி இல்லை.
A9பாதை திறந்ததும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்தது.




K.H.L. Kanakarathina (Army Commander)


கந்தரோடையின் வரலாற்றுப் பின்னணி பற்றிய உங்கள் கருத்து?
இவருடைய கருத்துப்படி கந்தரோடை ஆனது 2500 வருடம் பழமையானது.

2வது தடவையாக நாகதீபத்திற்கு புத்தர் வந்த போது இங்கு ஒர் நாள் ஓய்வெடுத்து சென்றதாக கூறினார்

சங்கமித்தை குழுவினர் யாழ்ப்பாணத்தின் மாதகல் பகுதிக்கு வந்தனர் என்றும் அக்குழுவினரின் சமாதிதான் கந்தரோடை ஸ்தூபி என்று கூறினார்.

இங்கு உரோமநாணயத்தில் ஜோச் அரசன் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட நாணயம் கிடைக்கப்பெற்றது.

33 மட்பாண்டம் கிடைத்துள்ளது. இத்தூபி ஆனது முருகற்பாறைக்கல் கருங்கற்களினால் செய்யப்பட்டது.


சுற்றுலாபயணிகள்

கந்தரோடையின் வரலாற்றுப் பின்னணி பற்றிய உங்கள் கருத்து?

           K.Thanavatthy  (Colombo)

  இது புராதன பௌத்த இடம். 60 தேரர்கள் இறந்த இடம்.
இது தற்போது சுற்றுலாத் தளம்
    
K.Shena   (Anurathapura)

இது புராதன பழமை வாய்ந்த இடம். 1000 ஆண்டு பழமை வாய்ந்தது.


தொகுப்பு

     கந்தரோடை காட்டுகின்ற வரலாற்று பின்னணி என்ற தலைப்பின் இச் சிறு நேர்காணலை அம் மையத்தில் பணிபுரியும் அலுவலகர்கள் சுற்றுலாப்பயணிகள் அயலவர்கள் மற்றும் இத் துறைசார்ந்த தொல்லியல் திணைக்களபணிப்பாளர் தொல்லியல் பேராசியர்கள் தந்தருளிய கருத்துப்படி அவர்களுடைய பார்வையில் சிறுசிறு முரணான கருத்துக்களை காணக்கூடியதாக உள்ளது. அந்தவகையில் கந்தரோடை மையத்தின் தொன்மை வரலாறானது சுற்றுலாப்பயணிகள் பார்வையில் இது ஓர் பௌத்த புராதன மையம் எனவும் இது ஓர் பௌத்த புனித பிரதேசம் எனவும் அவர்களுடைய கருத்து காணப்பட்டது.
      அதேவகையில் அத் துறை சார்ந்த தொல்லியல் பேராசியர்களை நேர்காணல் செய்த போது அவர்களுடைய கருத்து இக் கந்தரோடையானது வரலாற்றுக்கு முற்பட்டகால வரலாற்றுகால நீண்ட பாரம்பரியத்தில் பெரும்பங்கினை இப் பிராந்தியப் பண்பாட்டில் வகித்து வந்துள்ளது. இது இந்து பௌத்த பாரம்பரியங்கள் வர்த்தக நடவடிக்கைகளுடே சந்தித்த மையம் என்;ற வகையில் கந்தரோடை முக்கியத்துவம் பெறுகிறது. கந்தரோடை வரலாறானது திராவிடர் பண்பாட்டிலும் முக்கியத்துவம் பெறுகிறது. இத் தொல்லியல் மையம் ஆரம்பத் தமிழர் பண்பாட்டையே பிரதிபலிக்கினறது என்பது இவர்களுடைய கருத்தாக காணப்படுகிறது.
        இவர்களுடைய கருத்தை ஆராய்ந்து நோக்கும் போது எது எவ்வாறாயினும் கந்தரோடையின் வரலாற்று பின்னணியில் கந்தரோடை நல்லூரைப் போன்று சிறு தலைநகரமாக விளங்கியுள்ளமை தெரியவருகிறது. ஆனாலும் இத் தொல்லியல் மையம் அரைகுறை அகழ்வாய்விற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கைவிடப்பட்டிருப்பது என்பது இலங்கை திராவிடர் பண்பாடு பற்றிய அக்கறையுடையோர்க்கு கவலையளிக்கும் விடயமாகவுள்ளது. எதிர்காலத்திலாவது தொல்லியல் திணைக்களம் இதனைக் கருத்தில் கொண்டு முற்றுமுழுதாக இதனை அரசியல் நோக்கோடு பார்க்காமல் பக்கச்சார்பின்றி நடுநிலையாக வரலாற்று மரபுரிமை சின்னங்களின் உண்மையை வெளிப்படுத்த வேண்டும். அத்தோடு மேற்கொண்ட ஆய்வுகளின் அறிக்கைகளை வெகுவிரைவில் வெளியிடவேண்டும்; அத்தோடு எதிர்காலத்தில் இத் தொல்லியல் மையம் இன்னும் சிறந்த முறையில் பாதுகாக்கப்படும் என நம்புகிறோம்.














No comments:

Post a Comment