Friday, December 5, 2014

கந்தரோடை காட்டுகின்ற வரலாற்று பின்னணி -நேர்காணல்

     

            கந்தரோடை காட்டுகின்ற வரலாற்று பின்னணி என்ற தலைப்பின் இச் சிறு நேர்காணல் ஆனது யாழ்ப்பாணத் தீபகற்பத்தினுள் மிகவும் பழமை வாய்ந்த மையமாக விளங்கும் கந்தரோடையின் தொன்மை வரலாற்றை மீள நினைவுபடுத்தும் வகையில் அமைகின்றது.


                            


                                                                                                                          




                                                                                                      p.pushparatnam

[pro.head of department of history]



1. கந்தரோடையின் வரலாற்றுப் பின்னணி பற்றிய உங்களது கருத்து?

இலங்கையில் உள்ள 2வது பெரிய புராதன குடியிருப்பு மையம் ஆகும். 2½மைல் நீள அகலம் உடையது. ஆதி இரும்புக்கால பெருங்கற்கால சின்னங்கள் 1970ல் விமலாபேக்லேயால் மேற்கொண்ட ஆய்வில் கிடைக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் தொடக்ககால குடியிருப்பு. கந்தரோடையில் கிடைத்த ஆதி இரும்புக்கால பண்பாட்டு சின்னங்களை C14 காலக் கணிப்பிற்கு உட்படுத்தியதில் கி.மு 700க்கு முன்னர் குடியிருந்ததற்கான சான்றுகள் கிடைக்கப்பட்டன.

இவ் ஆய்வில் விமலாபேக்லே தமிழ்நாட்டில் அல்லது இங்கு வாழ்ந்தவர்கள் தமிழகத்தோடு நெருங்கிய ஒற்றுமை கொண்டனர் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

இத்தகைய குடியிருப்பு கந்தரோடைஇ மாதோட்டம்இ பொம்பரிப்பு வரை பரந்திருந்தததை பிற்கால ஆய்வு உறுதி செய்கிறது.

இப் பண்பாட்டு மையங்களில் தொடர்ச்சியான ஒரு நகரமயமாக்கல் செறிவான குடியிருப்பு ஏற்பட்டது. அருகில் உள்ள தமிழகம்இ தென்னிந்தியாஇ வடஇந்தியாஇ உரோமஇ கிரேக்கஇ சீனஉறவு இருந்ததற்கான சான்றுகள் தொல்லியல் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

பௌத்தமதம் பரவியது அதன் தாக்கம் கந்தரோடையில் ஏற்பட்டது. பொதுவாக பௌத்த எச்சம் வழிபாட்டுதலம் இருக்கும். அதைச் சுற்றி பல வழிபாட்டு கட்டிடம் காணப்படும். கந்தரோடை ஸ்தூபிக்கு பக்கத்தில் பலநூற்றுக்கணக்கான ஸ்தூபிகள் காணப்பட்டது. 

கந்தரோடை முக்கிய வணிகதளம.; தமிழக வடஇலங்கை உறவின் தொடர்பு காணப்படுகிறது. இங்கு பல்வேறுபட்ட பண்பாட்டு மக்கள் குடியேறினர். அதை தொடர்ந்து பௌத்ததுறவிகள் தங்கி குடியேறினர்.

3வது கலாச்சாரபடையாக பௌத்த எச்சம் காணப்படுகிறது. பௌத்தசின்னங்கள் மூலம் குறிப்பிட்ட இனப்பண்பாடு இருக்கவில்லை. இங்குபல இன மக்களது பண்பாடு ஏற்பட்டதற்கு மட்பாண்டம் முதலான சான்றுகள் கிடைத்துள்ளன.

ஆதி இரும்புக் காலபண்பாடு தமிழக பிராகிருதம் சான்றுகள் பௌத்தம் ஆதியில் இருந்ததை நிராகரிக்க முடியாது.

தமிழகத்திலும் கி.பி 7 முதல் தமிழ் பௌத்தம் மேலோங்கி காணப்பட்டது. தமிழக யாழ்ப்பாண உறவின் தொடக்ககால மையமாக கந்தரோடை காணப்படுகிறது. 

பின் கந்தரோடை மையம் பாண்டிய சோழ பொலநறுவை யாழ்ப்பாணஅரசு சமகால சீனாவின் பொருளாதார ஆட்சியில் நெருங்கிய தொடர்பு கொண்டது.

கந்தரோடை நகரமயமாக்கம் சிறுநகரமாக இருந்தது. யாழ் அரசு தொடர்பாக தமிழ் இலக்கியங்களில் இலங்கையில் இருந்த தமிழ் அரசு கதிரமலை தலைநகராக உக்கிரசிங்கன் மாருதப்புரவிகவள்ளிகால அரசு தோன்றியது.

8ம் 9ம் நூற்றாண்டில்     நூல்களினதும் போல்பீரிஸ் அநுராதபுரத்தை அடுத்து இலங்கையில் தோன்றிய இன்னொருநகர் கந்தரோடையென கூறினார். ஏனெனில் பல இனம் இருந்ததற்கான ஆதாரம் காணப்படுகிறது.

2011ல் தொல்லியல் திணைக்களமும் வரலாற்றுத்துறையின் அகழ்வாரட்சியில் 54 கலாச்சாரமண்படை அடுக்குகள் கண்டுபிடிக்கப்பட்டது. 20ம் நூற்றாண்டுவரை கற்கால மக்களது பண்பாட்டை பிரதிபலிக்கின்றது. அப் பண்பாட்டு மரபு மக்கள் இன்றும் வாழ்கின்றனர் என்பதை நிராகரிக்கமுடியாது.

இத்தகைய நீண்ட தொடர்ச்சியான சான்றுகள் இதுவரை வேறு எந்த இடத்திலும் கண்டுபிடிக்கவில்லை



2. இப்பிரதேசம் எந்த பாரம்பரியத்தை பிரதிபலிக்கின்றது?

கந்தரோடையில் தற்போது வாழுகின்ற மக்களது வரலாற்றை பின்நோக்கி பார்த்தால் கால அடிப்படையில் இது தொடக்க கால பாரம்பரியம். ஆதி இரும்புக்கால வழிவந்த பாரம்பரியத்தைக் பண்பாட்டை கொண்டது.

கந்தரோடையில் வாழுகின்ற தமிழ் இந்து மக்களின் பாரம்பரிய  தொடக்கமாகவே கந்தரோடையின் தொடக்க கால பாரம்பரியம் காணப்படுகிறது. திராவிட பாரம்பரியம் தமிழ்பாரம்பரியம் அமைவிடம் பல நாட்டு வணிகர் சந்திக்க வைக்கின்ற மையமாக காணப்படுகிறது. ஆதலால் நாட்டில் பிறநாட்டவரது பண்பாடு இணைந்தது. ஆனால் பெரும்பாலும் தமிழர் பாரம்பரியத்தை பிரதிபலிக்கின்றது.


3. 2011ம் ஆண்டு நடைபெற்ற ஆய்வின் ஆய்வறிக்கை வெளியிடப்படாமைக்கான காரணம்?

2011ம் ஆண்டு ஆய்வு தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டது. இதன் ஆய்வறிக்கை வெளியிடப்படாவிட்டாலும் சில முடிவுகள் எடுக்கப்பட்டது. 

1970 விமலாபேக்லி; மேற்கொண்ட ஆய்வு ஆதி இரும்புக்கால பண்பாட்டு சின்னங்கள் கண்டறியப்பட்டதோடு அத்தகைய பண்பாடு கந்தரோடை ஆரம்பகால பண்பாடு என்பர்.

அதில் பங்கெடுத்த தொல்லியல் திணைக்கள பணிப்பாளார் கலாநிதி.சிரான் தெரணியகலஇதொல்லியல் திணைக்கள பிரதிபணிப்பாளார் னுச.நிமல்பெரோ பேராசிரியர் புஸ்பரட்ணம் போன்றவர்களது ஆய்வு ஆதி இரும்புக்கால பண்பாடே முன்னிலை வகிக்கிறது.

நவீனகால காலக்கணிப்பிற்கு உட்படுத்திய போது தொடக்ககால பண்பாடு 2700 ஆண்டுகளுக்கு முற்பட்டது. விஞ்ஞானபுர்வமாக நிறுவப்பட்டது. இதன் ஆய்வறிக்கை எதிர்காலத்தில் வெளியிடப்படலாம்.

4. ஏன் மீண்டும் இப்பிரதேசத்தில் ஒரு ஆய்வு செய்யப்படவில்லை?

தொல்லியல் திணைக்களம் திட்டமிட்டபடி இயற்கைமண் வரை 2 இடத்தில் ஆய்வு செய்வது என்றது முக்கியமானது. ஆனால் ஆய்வு முழுமை பெற்றதால் மீண்டும் ஆய்வு செய்யவேண்டிய அவசியம் இல்லை.

ஏனைய இடங்களை தெரிவுசெய்து அகழ்வாய்வதற்கான திட்டம் உண்டு.

5. கந்தரோடையும் ஏனைய மரபுரிமைசின்னங்கள் போல முக்கியத்துவம் பெறுமா?

வட இலங்கையில் யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் தொடக்ககால மரபுரிமைசின்னங்கள் கந்தரோடையில் கண்டுபிடிக்கப்பட்டது.

வட இலங்கையில் யாழ்ப்பாணத்தை பொறுத்த வரையில் கந்தரோடையில் கண்டுபிடிக்கப்பட்ட மரபுரிமைச்சின்னங்கள் அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்கப்படுகின்றது.





6. இனிவரும் காலத்தில் வடபகுதியில் காணப்படும் மரபுரிமைசின்னங்கள் பாதுகாக்கப்படுமா?

2010க்கு பின்னர் வட இலங்கையில் மரபுரிமைச் சின்னங்களை பாதுகாக்க தொல்லியல் திணைக்களம் உருவாக்கப்பட்டது.

180க்கு மேற்பட்ட தொல்பொருட் சின்னங்கள் பிரகடணப்படுத்தப்பட்ட அதேநேரம் அதைக் கண்டறிந்து பாதுகாத்து வருவதற்கு மாகாண சபை தொல்லியல் திணைக்களத்தை ஏற்படுத்தியது.

இன்னும் தொடக்க மாகாண சபை பிராந்திய தொல்லியல் திணைக்களத்தை உருவாக்கி அதன் மூலம் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.


7. இவ் மரபுரிமைச் சின்னத்தைப் பாதுகாப்பதனால் இனிவரும் காலத்தில் தொல்லியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமா?

 தொல்லியல் பட்டதாரிகளுக்கு இவ் இடங்களிலிருந்து வேலை கிடைக்கும்.

தொல்லியல் திணைக்களம் சமகால கலாச்சார சுற்றுலாவில் பங்களிப்பு செலுத்துகின்றது. இதனால் பெரும்பாலன வேலைவாய்ப்பு கிடைக்கும்.

மத்திய கலாச்சார நிதியம் வெளிநாட்டு நிதி உதவியோடு வடபகுதி மரபுரிமை சின்னங்களை பாதுகாப்பதற்கான திட்டம்.

வடமாகாணசபை மரபுரிமைச் சின்னங்களை பாதுகாப்பதற்கான பிராந்திய தொல்லியல் திணைக்களத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கிறது

No comments:

Post a Comment